2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஆசிய - பசுபிக் பிராந்தியத்தின் ஆண்டின் சிறந்த நிதியமைச்சர்

Princiya Dixci   / 2017 ஜனவரி 10 , மு.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய பொருளாதாரச் சீர்திருத்த அத்தியாயத்தை நோக்கி இலங்கையை அழைத்துச் சென்றமை, பொருளாதாரப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியமையில், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பங்களிப்புக்காக, மதிப்புமிக்க “த பாங்கர்” சஞ்சிகையினால், ஆசிய - பசுபிக் பிராந்தியத்துக்கான ஆண்டின் சிறந்த நிதியமைச்சராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

நிதி நெருக்கடியிலிருந்து இலங்கை தப்பிப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1.5 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் கடன் திட்டத்தை கருணாநாயக்க பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்த பாங்கர் சஞ்சிகை, இருப்புகளை அவர் அதிகரித்துக்கொண்டதாகவும், சர்வதேச முதலீட்டாளர்களிடம் மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்பியதாகவும் தெரிவித்துள்ளது.  

சர்வதேச நாணய நிதியத் திட்டத்தோடு, நிதி உறுதிப்பாட்டை நோக்கியும் இலங்கை பயணிக்கிறது. கருணாநாயக்க பதவியேற்றபோது, 7 சதவீதமாக இருந்த, வரவு-செலவுத் திட்ட துண்டு விழும் தொகை, தற்போது 5.6 சதவீதமாக, எதிர்பார்ப்புகளுக்கு சற்றுக் குறைவாக உள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .