Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 22 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச உத்தியோகத்தர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பிலான சுற்று நிரூபத்தினை தயாரிப்பதற்குரிய ஆலோசனை உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் போது, பெண்கள் சேலையும், கர்ப்பிணி பெண்கள் அவர்களுக்கு பொருத்தமான உடையையும், அணிய வேண்டும் என சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆண்களுக்கு வெள்ளை நிற மேற்சட்டையும், கருப்பு நிற காற்சட்டையையும் அலுவலக ஆடையாக பரிந்துரைக்கவும், சப்பாத்து அணிவதனை கட்டயாமாக்குவதற்கும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார். (R)
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago