Mayu / 2026 மே 17 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரம்புக்கனையிலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நோக்கி சனிக்கிழமை (16) காலை பயணித்துக்கொண்டிருந்த புகையிரதமொன்று வனவாசல பகுதியில் புரண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்துக்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர், புகையிரத திணைக்கள அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்; சில நாசகார கும்பல்களினால் புகையிரத பாதையின் பாகங்கள் கழற்றி விற்கப்பட்டமையே இதற்குக் காரணம் எனக் குறிப்பிட்டனர்.
இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பேலியகொட பொலிஸார், சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் மற்றுமொருவரையும் பொலிஸார் கைது செய்தனர் இவ்விருவரும் புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கொழும்பு மேலதிக நீதவான் நுவான் கௌசல்ய முன்னிலையில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அவ்விருவரையும் எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
29 minute ago
44 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
44 minute ago
54 minute ago
1 hours ago