Gavitha / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலுள்ள சிறுவர்களின் மில்லியன் கணக்கான ஆபாசப்படங்களை, உலகளாவிய ரீதியில் பிரசுரித்து ஒரு இணையத்தை நிறுவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், எழுவரை ஸ்பானிய சிவில் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
உலகளாவிய ரீதியில் இயங்கி வந்துள்ள இந்தக்குழுவினர், சுமார் 80 சிறுவர்களை ஆபாசமாக படமெடுத்து வெளியிட்டுள்ளதாகவும் இவர்களுள் தற்போது 29 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இக்குழுவின் தலைவர் 13 வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பார்சிலோனா, பார்சிலோனாவுக்கு தெற்கிலுள்ள டோர்டோசா, வலெந்ஸீய மற்றும் மொரோக்கோ ஆகிய பகுதிகளில் உள்ள சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளும் படங்களை இவர்கள் அதிகம் விநியோகித்துள்ளதாகவும் இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர், செக் குடியரசு, கென்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலுள்ள ஆபாசப் படங்களை கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை உலகளாவிய ரீதியில் விநியோகித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இக்குழுவினர் பாலியல் துஷ்பிரயோகத்தை இலக்காகக் கொண்டு, இறுதியாக மெக்சிக்கோவுக்கு பயணிக்கவிருந்தமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிவில் பாதுகாப்பு படையினர் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
19 minute ago
50 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
50 minute ago
55 minute ago
1 hours ago