2025 ஜூலை 09, புதன்கிழமை

ஆர்மி உபுல் கொலை : சந்தேக நபர் கைது

Freelancer   / 2025 ஜூலை 08 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

றாகமை படுவத்தை பகுதியில் கடந்த 3ஆம் திகதி இரவு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

களனி பிரிவு குற்ற விசாரணை பணியகத்தால் றாகமை படுவத்தை பகுதியில் இன்று (08) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபரும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர்களிடம் இருந்து 9 கிலோ 220 கிராம் ஹெராயின், 67 கிலோ 520 கிராம் கேரள கஞ்சா, 02 சப்மெஷின் ரக துப்பாக்கிகள், 9மி.மீ 10 தோட்டாக்கள், ஒரு வாள், விமானப்படை சீருடைகள், 4 கையடக்க தொலைபேசிகள், ஒரு மடிக்கணினி மற்றும் 4 தராசுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. 

இதன்போது போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .