2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஆளுநர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 12 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி செயன்முறைகளை ஒழுங்கான முறையில் பேணுதல் மற்றும் மாகாண சபையின் செலவினங்களை நிர்வகித்தல் போன்ற பொறுப்பு ஆளுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இது தொடர்பில் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய சவாலான காலகட்டத்தில் பொதுச் செலவினங்களை நிர்வகிப்பதன் மூலம் பொதுச் சேவைகளை உகந்த மட்டத்தில் பராமரிப்பது மிகவும் முக்கியமானது என்று குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் மாகாணத்தின் அபிவிருத்தி முன்னுரிமைகளை இனங்கண்டு கொள்வதிலும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி அலுவலகத்துடனும் ஆளுநர்கள் நல்ல ஒருங்கிணைப்பை பேண வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 15 நாட்களுக்கு ஒரு முறையாவது தமது மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறும் மாகாண சபையின் ஊடாக அமுல்படுத்தப்படும் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் வழமையான கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறும்   ஆளுநர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இக்கட்டான காலப்பகுதியில் தேசிய இலக்குகளை அடைவதற்கு ஆளுநர்களின் பங்களிப்பு தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தி வருவதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X