Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 செப்டெம்பர் 09 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
ஒற்றுமை, வடக்கு - கிழக்கு இணைப்பைற்றி மேடைகளில் பேசியவர்கள், இன்று ஜ.நாடுகள் சபைக்கு 4 பிரிவாக கடிதம் அனுப்பியுள்ளனர் என, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகுழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இவர்களுக்குள்ளே ஒற்றுமை இருக்கின்றதா? பல கூறுகளாக பிரிந்து கிடப்பவர்கள் மட்டக்களப்புக்கு வந்து உபதேசம் செய்கின்றார்கள் எனவும், அவர் கூறினார்.
மட்டக்களப்பு - கள்ளியங்காட்டில் லங்கா சதேச மொத்த விற்பனை நிலையத்தை, இன்று (9) திறந்து வைத்து, உiராற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமத்திரன,; ஜரோப்பா யூனியனையும் அமெரிக்காவையும் திருத்திப்படுத்தவும் அதற்கு போட்டியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், முன்னாள் வடமாகான முதலமைச்சர் சி;.வி விக்கினேஸ்வரனும் சிவில் அமைப்புக்களும் என பல கூறுகளாக பிரிந்து ஜ.சநாடுகள் சபைக்கு கடிதம் அனுப்புகின்றனர எனவும் கூறினார்;.
இவ்வாறு பல கூறுகளாக பிரிந்து கிடப்பவர்கள் மட்டக்களப்புக்கு வந்து உபதேசம் செய்கின்றார்கள் எனத் தெரிவித்த அவர், ஆகையால், யார் முதலில் ஒன்றுபட வேண்டும் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும் எனவும் கூறினார்.
'மட்டக்களப்பு மாவட்டத்திலே எத்தனை மூடை நெல் இருக்கின்றது, எத்தனை மூடை அரிசி இருக்கின்றது என்பதை பார்க்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடஆம இருக்கின்றது. திட்டமிட்ட சதியில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அரிசியை 120 ரூபய்க்கு விற்பது என்பது மிக ஓர் அடாத்தான விடையமாக பார்க்கின்றோம்
'ஆகவே, அரசியல்வாதிகள் என்பதற்காக எல்லா பிழைகளையும் நாங்கள் நியாயப்படுத்த முடியாது. முடிந்தால் ஆலை உள்ளவர்கள் பதிவு செய்து எங்களிடம் 20 ஆயிரம் 30 ஆயிரம் மூடை இருக்கின்றது என தெரிவித்து, நெல்லை குத்தி அரிசியாக்க அரசாங்கம் தடை விதிக்கவில்லை.
'ஆலைகளே இல்லாமல் தனிய களஞ்சியசாலைகளை கட்டி, நெல்லை களஞ்சியப்படுத்தவி விட்டு, அதனை அதிகூடிய விலைக்கு விற்க காத்திருப்பவர்களைத் தான் நாங்கள் சுற்றி வளைத்தோம். ஆனால் இந்த விடயத்திலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், பாமர மக்கள் விலை ஏற்றத்தால் கஷ்டபடுகின்ற மக்கள் பக்கத்தில் இருக்க வேண்டும்
'இதேவேளை, மட்டக்களப்பில், டெல்டா வேரியன் 88 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் இளைஞர்கள் பொது இடங்களில் கூடுவது வர்த்தக நிலையங்களில் கூடுவது மற்றும் அநாவசியமாக வீதிகளில் நடமாடுவதை தவிர்த்து, வீடுகளை விட்டு வெளியேறாது சுகாதார துறையினரின்; சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும்' எனவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago