S.Renuka / 2026 பெப்ரவரி 15 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது சிவராத்திரி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இருள் நீங்கி ஞான ஒளி பிரகாசிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் மிகுந்த பக்தியுடன் மகா சிவராத்திரி தினத்தை இன்று கொண்டாடுகின்றனர். மகா சிவராத்திரி தினம் என்பது உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானை வழிபடுவதற்குரிய மிக உன்னதமான நாளாக கருதப்படுகிறது.
இது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவரின் சங்கமத்தையும், சிவபெருமான் தனது தெய்வீக நடனமான தாண்டவத்தை நிகழ்த்துவதையும் நினைவுகூறும் விதமாக அமைந்துள்ளது. இது உலகம் மற்றும் வாழ்க்கையின் 'இருளை வெல்வதை' குறிக்கிறது.
அனைத்து மனித உறவுகளையும் மதிக்கும், ஒழுக்கநெறியுள்ள மற்றும் கருணையுள்ள சமூகத்தை உருவாக்குவதில் இதுபோன்ற மத மற்றும் கலாசார நிகழ்வுகள் மிக முக்கியமானவை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அகங்காரத்தை நீக்கி, உள்ளங்களில் ஆன்மீக உயிர்ப்பை ஏற்படுத்தும் மகா சிவராத்திரி சமய சடங்குகள், நேர்மை, தாராள மனப்பான்மை மற்றும் மன்னிப்பு போன்ற உண்மைப் பண்புகளின்படி வாழ நம்மை நெறிப்படுத்துக்கின்றதுடன், மகா சிவராத்திரியின் ஆன்மீக செய்தி நமது சமூக உணர்வை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவும் நான் பார்க்கிறேன்.
அண்மைக்கால நினைவுகளில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றை எதிர்கொண்ட பின்னர், உறுதியுடனும் திட்டமிடலுடனும் மீண்டெழுந்து, அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றத்துடன் புதிய மறுமலர்ச்சியின் சகாப்தத்தை நோக்கி நாம் இப்போது பயணிக்கிறோம்.
மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த எம்முடன் இணையுமாறு அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
மகா சிவராத்திரியை கொண்டாடும் இலங்கையில் உள்ள இந்து பக்தர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள இந்து மக்களின் நல்லெண்ணங்கள் நிறைவேறும் அர்த்தமுள்ள மகா சிவராத்திரி தினமாக அமைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago