2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

இந்திக அனுருத்தவுக்கு கொரோனா தொற்றவில்லை

Editorial   / 2021 ஜனவரி 29 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் மேம்பாட்டு  இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்.  எனினும், தனியார் தொலைக்காட்சி அலைவரிசையில் நடந்த அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினரான வசந்த யாப்பா பண்டாரவுடன் கலந்து கொண்டதன் காரணமாக அமைச்சர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளானார்.
 
இருப்பினும் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த பின்னர் பி.சி.​ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.  அவர், கொரோனா வைரஸினால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அவரது ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X