2025 ஜூலை 23, புதன்கிழமை

இந்திய உயர்ஸ்தானிகரை அவசரமாக சந்தித்தது இ.தொ.கா

Editorial   / 2022 நவம்பர் 09 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய உயர்ஸ்தானிகளர் கோபால் பாக்லேவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் இன்று (09) இடம்பெற்றது.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து, TANTEA தோட்டங்களில் குடியேறியுள்ள பெருந்தோட்ட சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினை தொடர்பாக இந்த கலந்துரையாடலில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து சென்றவர்களின்  வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் கூட்டுப் பொறுப்பு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அரசாங்கங்களுக்கும் உண்டு.

மேலும் மலையகத்தில் நிர்மாணிக்கப்பட வேண்டிய 10,000 வீடுகள் குறித்தும், பெருந்தோட்ட இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாக தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில்  இந்திய ஆசிரியர்களை நியமித்து,புதிய பாடநெறிகள் ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இ.தொ.காவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென   இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் அரசியல் பிரிவுக்கான முதன்மைச் செயலாளர் திருமதி பானு ஆகியோர் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .