2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

இந்தியாவின் வட மாநிலங்களில் நிலநடுக்கம்

George   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லி, உத்தராகண்ட் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் நேற்றிரவு இலேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

5.8 ஆக ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுடன், உத்தராகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்களுக்கோ பொருட்களுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என இந்திய பொலிஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X