2024 மே 18, சனிக்கிழமை

இன்று அட்சய திருதியை; மறந்தும் கூட இந்த தவறை செய்யாதீங்க

Freelancer   / 2024 மே 10 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்து மதத்தில் அட்சய திருதியை மிகவும் மங்களகரமான நாளாகும். இந்த அட்சய திருதியை நாளில் என்ன செய்தாலும், என்ன வாங்கினாலும் அது பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. 

இந்த ஆண்டின் அட்சய திருதியை நாளானது மே 10 ஆம் திகதி, அதாவது இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் விநாயகர், லட்சுமி தேவி, குபேரர், விஷ்ணு ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளை செய்து மக்கள் வழிபடுவார்கள். 

இந்த நாளில் தான் குபேரர் சிவன் மற்றும் பிரம்மாவிடம் ஆசியை பெற்று, சொர்க்கத்தின் செல்வத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன.

அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை 

1. அசைவம் கூடாது 

அட்சய திருதியை நாள் மிகவும் மங்களகரமான நாள். இந்நாளில் செழிப்பான வாழ்க்கையை வாழ மக்கள் லட்சுமி தேவி, குபேரர், விநாயகர், விஷ்ணு ஆகியோரை வழிபட்டு, சிறப்பு பூஜைகளை செய்து, அவர்களது ஆசியை பெற முயற்சிப்பார்கள். இந்த நாளில் அசைவ உணவுகளை உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சைவ உணவுகளான காய்கறிகள், பழச்சாறுகள், பழங்கள், பால் பொருட்கள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

2. ஆபரணங்கள் வாங்குவது 

அட்சய திருதியை நாளில் வாங்கும் பொருட்கள் பலமடங்கு பெருகும் என்று மக்கள் நம்புவதால், நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ தங்கம், வெள்ளி மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது நல்லது. அதோடு இந்நாளில் சொத்துக்கள், புதிய வாகனங்கள் மற்றும் புதிய தொழில்களை தொடங்கவும் செய்வார்கள். 

3. கோவிலுக்கு செல்வது 

நேர்மறை ஆற்றல் அதிகம் நிறைந்த மிகவும் புனிதமான இடம் தான் கோவில். கோவிலுக்கு செல்வதன் மூலம் ஒருவர் மன அமைதியையும், நிம்மதியையும், ஒருவித பாதுகாப்பு உணர்வையும் பெறலாம். ஒரு நல்ல நாளில் கோவிலுக்கு சென்று தெய்வங்களை பூஜித்து வணங்கி, அவர்களின் ஆசியை பெறுவது நல்லது. 

4. தான தர்மங்கள் 

பொதுவாக ஒரு நல்ல நாளில் தான தர்மங்களை செய்வது மிகவும் நல்லது. அதுவும் அட்சய திருதியை நாளில் ஏழை எளியோருக்கு ஆடை, உணவுகள், தண்ணீர் போன்றவற்றை தானம் செய்வதால் ஒருவர் நல்ல கர்மாவைப் பெறுவதோடு, தெய்வங்களின் ஆசியையும் பெறலாம். 

5. ஆன்மீக நடவடிக்கைகள் 

அட்சய திருதியை நாளன்று புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற கெட்ட பழக்கங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இது தவிர நகங்களை வெட்டுவது, சூதாட்டம் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். இந்த நாள் மிகவும் புனிதமான நாள், இந்நாளில் ஒருவர் தங்களின் நேரத்தை கெட்ட விஷயங்களுக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, ஆன்மீக நடவடிக்கைகளில் நேரத்தை செலவிடுவதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம். 

6. கடன் கூடாது 

அட்சய திருதியை நாள் மிகவும் மங்களகரமான நாள். இந்நாளில் கடன் வாங்குவதையோ அல்லது லோன் எடுப்பதையோ தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த ஆண்டு முழுவதும் கடன் அதிகம் வாங்க நேரிட்டு, கடன் பிரச்சனையால் அவதிப்பட நேரிடும். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .