2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இயந்திர வாள்களை பதிவுச் செய்வதற்கான காலம் நீடிப்பு

Editorial   / 2019 மார்ச் 01 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரங்களை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும், இயந்திர வாள்களை பதிவுச் செய்ய வழங்கப்பட்ட காலம் அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்திருந்த நிலையில், அதனை  நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை, அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று இயந்திர வாள்களை பதிவுச் செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன அழிவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இயந்திர வாள்களை பதிவுச் செய்ததன் பின்னர் அவற்றுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .