2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

இரத்தினக்கல்லுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 ஜூலை 27 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை பகுதியில், 82 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கல் ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், மொரட்டுவ பஸ் ஒன்றில் வௌ்ளவத்தையில் இருந்து பம்பலப்பிட்டிக்கு சென்று கொண்டிருந்த போதே, அவரிடம் இருந்து இரத்தினகல்லையும் 1 இலட்சம் 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலை ஒன்றையும் பொலிஸார் மீட்டனர்.

குறித்த நபர், இவற்றை திருடியாதகக் குற்றஞ்சாட்டப்பட்டே கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் பாணந்துறை பகுதியை சேர்ந்த 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் அலுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .