2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

இரவு 10 மணி வரை விளக்குகளை அணைக்கவும்

Editorial   / 2026 மார்ச் 30 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துதல் தொடர்பில் மின்சாரம் மற்றும் வலுசக்தி பாதுகாப்பு அமைச்சு வழிகாட்டியை அனுப்பிவைத்துள்ளது. அதன்படி... அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்களில் பிற்பகல் 3.00 மணிக்கு அனைத்து குளிரூட்டிகளையும் அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும். இதே முறையில் செயல்படுமாறு அன்புடன் தனியார் துறையினரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பிற்பகல் 8.00 மணிக்குப் பின்னர், விளம்பரங்களுக்காக பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்சார ஒளிப்பலகைகள் மற்றும் திரைகளை அணைக்க வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களினால் கட்டுப்படுத்தப்படும் வீதி விளக்குகளை பிற்பகல் 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதிக்குள் அணைப்பதற்குப் பொருத்தமான விசேட திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். அனைத்து விதமான பெரிய அளவிலான விழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை (100 பேருக்கும் அதிகமானோர் பங்கேற்கும் நிகழ்வுகள்), தேசிய மின்சாரக் கட்டமைப்பில் இருந்து மின்சாரத்தைப் பெறாமல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .