2026 மே 04, திங்கட்கிழமை

இராஜாங்கனையைச் சேர்ந்த 395 பேருக்கு தொற்று இல்லை

Editorial   / 2020 ஜூலை 16 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 395 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.

அத்துடன், ராகமை தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில், அவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது கண்டறியப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குண்டசாலையில் 101 பேர், கொட்டுகொட பகுதியில் 74 பேர், தந்திரிமலை – ரந்தம்பே பகுதியில் 266 பேர், பொலன்னறுவை வைத்தியசாலைக்கு வருகை தந்த 200 பேர், இராஜாங்கனையில் 150 பேர் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் PCR பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .