Freelancer / 2025 ஒக்டோபர் 18 , பி.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் ஆறு அடிக்கு திறந்துவிப்பட்ட நிலையில் வினாடிக்கு மொத்தம் 8,352 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக திணைக்களம் கூறுகிறது.
இதேவேளை அங்கமுவ குளத்தின் இரண்டு வான் கதவுகள் தலா ஐந்து அடிக்கு திறந்துவிடப்பட்டு வினாடிக்கு 2,994 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. R
11 minute ago
13 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
43 minute ago