2026 மே 04, திங்கட்கிழமை

இறுதியாக பதிவான தொற்றாளர் விவரம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நேற்று (23)  6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இருவர் மலேஷியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பேருக்கும் கென்யா மற்றம் டுபாயில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த இருவருக்கும்  தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 805 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, வைத்தியசாலைகளில் 136 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .