Freelancer / 2026 ஏப்ரல் 14 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உக்ரைன் நாட்டுப் பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெண் ஒருவரைத் தாக்கியுள்ளார் எனவும் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளார் என்றும் குறித்த உக்ரைன் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்று இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கல்கிசை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கை பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (a)
29 minute ago
41 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
41 minute ago
59 minute ago