Editorial / 2026 பெப்ரவரி 28 , பி.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ சூழ்நிலைக்கு மத்தியில், வெளிநாட்டுப் படையினருக்கு சொந்தமான போர் விமானங்கள் இலங்கை வான்வெளியில் இயங்க அனுமதி வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் வதந்திகள் என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானிய இலக்குகள் மீது நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்ட அமைதியின்மையுடன், நாட்டின் வான்வெளியில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்தன.
தற்போது கவனிக்கப்படும் விமான நடவடிக்கைகள் முற்றிலும் உள்ளூர் பயிற்சி எனவும் இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிகழ்ச்சியுடன் இணைந்து இந்தப் பயிற்சிகள் நடத்தப்படுவதாகவும், அதனால்தான் அப்பகுதியில் வசிப்பவர்கள் அசாதாரண விமான சத்தங்கள் அல்லது அசைவுகளைக் கவனிப்பதாகவும் இதனை சிலர் வெளிநாட்டு இராணுவ விமானங்கள் பறப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
மார்ச் 6 முதல் 8 வரை இரத்மலானை விமானப்படை தளத்தில் பொதுமக்கள் பார்வையிட விமான கண்காட்சிகள் நடைபெறவுள்ளதுடன், அங்கு பொதுமக்கள் விமான சாகசங்கள் மேம்பட்ட விமான தொழில்நுட்பத்தையும் பார்வையிட முடியும்.
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago