Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலஞ்ச, ஊழல் தடுப்பு சட்டத்தை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும், கூடிய விரைவில் இலஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு புதிய சட்ட திருத்தமொன்றை அமைச்சரவையில் சமர்ப்பித்து அதற்கான அமைச்சரவை அனுமதியை தான் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விசேட மீளாய்வுக் கூட்டம் நீதி, மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையில் நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு புதிய சட்டத்தின் உள்ளடக்கங்கள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டதுடன், சட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டது. இது குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும், கூடிய விரைவில் இலஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு சட்ட திருத்தமொன்றை அமைச்சரவையில் சமர்ப்பித்து அதற்கான அமைச்சரவை அனுமதியை தான் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது நிலுவையில் உள்ள பாரதூரமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் துரிதமாக விசாரணைகளை முன்னெடுக்க சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும், இடை நடுவே நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
28 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
5 hours ago
6 hours ago