Editorial / 2026 ஏப்ரல் 13 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ. அச்சுதன்
மூதூர் கிழக்கு, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ‘சம்பூர் வெளிச்சவீடு’ (Foul Point) கடற்பரப்பில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர், நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகச் சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சோகமான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் 3:40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மூதூர், ஹைரியா நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய எஸ்.எம். அப்லல் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை (12) மாலை தனது நண்பர்களுடன் இணைந்து சம்பூர் வெளிச்சவீட்டு கடல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். இதன்போது, எதிர்பாராத விதமாக எழுந்த பாரிய அலையினால் அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளார்.
இளைஞன் நீரில் மூழ்கித் தத்தளிப்பதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர். நீண்ட தேடுதலின் பின்னர் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது.
விடுமுறை தினத்தில் இடம்பெற்ற இந்தச் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
22 minute ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
13 Apr 2026