2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

George   / 2017 ஜனவரி 26 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன், அ.அகரன்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியா, பிரதான தபாலகத்துக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டு வந்த, உண்ணாவிரதப் போராட்டம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியையடுத்து, கைவிடப்பட்டுள்ளது.

அந்த பிரச்சினைக் குறித்து, எதிர்வரும் 9​ஆம் திகதி, கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுப்பதாக அவர் வாக்குறுதியளித்துள்ளார்.

அன்றைய தினம், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அலரி மாளிக்கைக்கு வருமாறும் அவர் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க, பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டவர்கள் இந்த கலந்துரைாயடலில் கலந்துக்கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் வாக்குறுதியையடுத்து, உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .