Nirosh / 2022 மார்ச் 20 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் வரிசைகள் இவ்வாரம் முடிவுக்கு வருமென தெரிவிக்கும் அமைச்சர் காமினி லொக்குகே, அதிகளவில் எரிபொருளை மக்கள் பெற்றுக்கொள்வதே எரிபொருள் தட்டுப்பாட்டுக்குக் காரணமெனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குத் தேவையான எரிபொருள்கள் பவுசர்கள் ஊடாக நேற்றும் (19), இன்றும் (20) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் வரிசைகள் குறையும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் எரிபொருள் வரிசைகளுக்குக் காரணம் எரிபொருள் விநியோகத்தை விட எரிபொருளை பெற்றுக்கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே. எரிபொருளை வாகனங்களுக்கு நிரப்பிக்கொள்வதைவிட பெரள்களிலேயே அதிகளவில் நிரப்பிக்கொள்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் இவ்வார இறுதியில் எரிபொருளை ஏற்றிக்கொண்டு மற்றொரு கப்பலும் வரவிருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர், ஞாயிற்றுக்கிழமை வரும் இக்கப்பலில் இருந்து அன்றைய தினமே எரிபொருளை இறக்க முடிந்தால், கொலன்னாவையில் உள்ள எரிபொருள் களஞ்சியசாலைக்கு அதனை அனுப்பி ஏனைய மாவட்டங்களிலும் எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியும் எனவும் கூறினார்.
நாட்டில் காணப்படும் எரிபொருள் பிரச்சினை இவ்வாரம் முடிவுக்கு வரும், எவ்வளவுப் பெரிய வரிசைகள் காணப்பட்டாலும் அவர்களுக்கு எரிபொருளை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026