2026 மார்ச் 26, வியாழக்கிழமை

எரிபொருள் இறக்குமதி: இரண்டு நிறுவனங்கள் தெரிவு

Freelancer   / 2022 ஜூன் 17 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

எரிபொருளை ஏற்றிக்கொண்டு மூன்று கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவித்த  அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இக் கப்பல்களுக்கான நிதியை செலுத்துவதற்கான நாணயக் கடிதம் கிடைத்த பின்னரே, இக் கப்பல்கள் எப்போது நாட்டை வந்தடையும் என்ற திகதியை அறிவிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இலங்கைக்கு பெற்றோல் மற்றும் டீசலை வழங்க இரண்டு புதிய சர்வதேச தனியார் நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.  விமான எரிபொருள்  விநியோகிக்க மற்றுமொரு தனியார் நிறுவனமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். 

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் நாட்டுக்கு வர இருக்கும் இறுதியான எரிபொருள் கப்பல்  நாட்டை வந்தடையும் என பிரதமர் அண்மையில் கூறியிருந்தார்.  இதனை சிலர் தவறாகப் புரிந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை பரப்பி வருவதாகவும் தெரிவித்தார்.

நாட்டுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இரு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு தேவையான நிதியை வழங்குவதற்கானநாணயக் கடிதத்தை மக்கள் வங்கி வழங்கியதன் பின்னர், இக் கப்பல்கள் நாட்டை எப்போது வந்தடையும் என்பது தொடர்பான உரிய திகதி அறிவிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் டீசல், பெற்றோல் ஏற்றிக்கொண்டு வரயிருந்த இரு கப்பல்களுக்கான நாணயக் கடிதத்தை இலங்கை வங்கி வழங்குவதற்கு தயாராக இருந்தது. எனினும் பின்னர் இலங்கை வங்கியால் நாணயக் கடிதத்தை வழங்க முடியாது போனது. 

இதனைத் தொடர்ந்து டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிக்கொண்டு வரவிருந்த இருக்கப்ப நிறுவனங்களுக்கும் எங்களால் நிதியை வழங்க முடியாது என்பதை அறிவித்தோம். இதனால் டீசல், பெற்றோலை பெற்றுக்கொடுக்க முடியாமல்போனது எனவும் கூறினார்.

இலங்கை வங்கியும் நாணயக் கடிதத்தை வழங்குவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து இருந்தாலும், அந்த வங்கியால் அதனை வழங்க முடியாது போனது. இதனாலேயே நாம் இலங்கை மக்கள் வங்கியுடன் கலந்துரையாடி கடன் கூற்றுக் கடிதத்தை பெற உள்ளோம். கடன் கூற்றுக் கடிதம் கிடைக்கப் பெற்றதும் அடுத்த எட்டு நாட்களுக்குள் மூன்று கப்பல்களில் எரிபொருள் ஐப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

கையிருப்பில் உள்ள டீசலை எதிர்வரும் 25ஆம் திகதி வரையிலும் பெற்றோலை 21ஆம் திகதி வரையிலும் முகாமைத்துவம் செய்ய முடியும் எனவும் கையிருப்பில் உள்ள பெற்றோலை முழுமையாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகித்தால் அதனை 21ஆம் திகதி வரையில் பயன்படுத்த முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .