R.Maheshwary / 2021 ஜனவரி 10 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று ஏற்படும் நிலையில், நாட்டில் கொரோனா தொற்றின் நிலையின் பாரதூரம் குறித்து தெளிவாவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, தற்போது அல்லது எதிர்காலத்தில் அனைத்து தரப்பினரும் கொரோனா கட்டுப்பாட்டுக்கு உண்மையான அர்ப்பணிப்பைக் காட்ட வேண்டியது அவசியம் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல்வாதி ஒருவர் முதலாவது தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாம் எவ்வாறான பாதுகாப்பு விடயங்களைப் பின்பற்றினாலும் இன்றைய நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நபரும் தொற்றாளராக மாறும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விசேடமாக நாட்டின் ஏனைய பிரதேசங்களில் தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர்கள் அவர்களது கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றாமை காரணமாக, அந்ததந்த பிரதேசங்களிலுள்ள தொற்றாளர்களின் முதல் நிலை தொற்றாளர்கள் தொடர்பான தகவல்களை வழங்காமை காரணமாக, நாம் அவர்களை தனிமைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதென்றார்.
கொரோனா பரவல் கொழும்பில் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், கொழும்பை தவிர்ந்த ஏனைய இடங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்பார்க்காதளவு அதிகரித்துச் செல்கின்றது. எனவே கொழும்பை விட ஏனைய இடங்களில் கொரோனா உபகொத்தணிகள் பரவும் நிலை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026