Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R. Yasiharan / 2022 செப்டெம்பர் 09 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்கொண்ட சந்திப்பிற்கு நன்றிகளை தெரிவித்துள்ளத்துடன், கொவிட் 19 வைரஸ் தொற்றுநோயின் பின்னரான இந்தியாவின் வலுவான பொருளாதார மீட்சிக்கும், குறிப்பாக டிஜிட்டல் மயமாக்கலில் மகத்தான வெற்றிக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பேரினப் பொருளாதாரம், நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், கடன் தீர்வுக்கான முன்கூட்டிய ஒத்துழைப்பைப் பாதுகாப்பதற்கும் மற்றும் நிதிச் சேர்க்கையை ஊக்குவிப்பதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான ஆதரவு வழங்கப்படும் எனவும், ஒரு வலுவான பல்தரப்பு அமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னேற்ற சீர்திருத்தங்களை முன்னெடுக்க தலைமைத்துவத்தை நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காணப்பட்ட போதிலும் உலக பொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து பிரகாசமான இடத்தில் திகழ்வதாக பாராட்டியுள்ளதுடன், உணவு மற்றும் எரிசக்தி விலைகள் மற்றும் சர்வதேச கடன் அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய பணவீக்கத்தின் அதிகரிப்பு குறைந்த வருமானம் கொண்ட நாடுகளை மிகவும் பாதித்துள்ளதாக கூறியுள்ளார். நேற்று, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பையும் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
25 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
3 hours ago