Editorial / 2019 ஜூலை 21 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்றிணைந்த எதிரணியில் ஜனாதிபதி வேட்பாளர்களாக ஐவருடைய பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டியவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனை கூறிய அவர், முன்மொழியப்பட்ட ஐவரில் ஒருவரை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.
“நாடே அறியும்படி ஒகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி எமது ஜனாதிபதி வேட்பாளரை நாங்கள் அறிவிக்கவுள்ளோம். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அனைவரினதும் இணக்கப்பாடுகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. முன்வைக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் தகுதியான ஒருவரை தெரிவு செய்யும் பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கல்வித் தகைமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா வலியுறுத்தியுள்ளார்.
“ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரின் கல்விப்பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை முடிந்தால் வெளிப்படுத்துமான கூறுகின்றோம். எமது தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் கல்விதகைமைகளை வெளிப்படுத்த நாங்கள் தயாராகவே உள்ளோம்” என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago