2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

ஒரு வயது குழந்தையை தாக்கிய தந்தை கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலையில் ஒரு வயது குழந்தையை தாக்கிய தந்தையை  நேற்றிரவு (2) கைது செய்துள்ளதாக, திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை - திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மதுபோதையில், ஒரு வயது குழந்தைக்கும் மனைவிக்கும் தாக்கியதாக பொலிஸாருக்கு கிடைத்த அவசர தொலைபேசி அழைப்பையடுத்தே, குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

குழந்தையும் மனைவியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .