2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கடற்பயணம் தொடர்பில் அவதானம் தேவை

George   / 2017 ஜனவரி 22 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலப்பிட்டியவிலிருந்து கொழும்பு, புத்தளம், மன்னார், காங்கேசன்துறை கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம், மணித்தியாலத்துக்கு 60 கி​லோமீற்றர் வரை அதிகரிக்கும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அதனைத்தவிர, ஏனைய கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம், மணித்தியாலத்துக்கு 50 கி​லோமீற்றர் வரை அதிகரித்து வீசலாம் எனவும் அந்த நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்காரணமாக, மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என கடமைநேர காலநிலை நிபுணர் சஷித்தா ஜயசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில்  இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என்றும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .