2025 மே 22, வியாழக்கிழமை

கனேடியத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி. சந்திப்பு

Freelancer   / 2025 மே 22 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கனடாவின் பிரம்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப் பெறுமதி மிக்க செயல். அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி தெரிவிக்கின்றேன் என்று சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கனேடியத் தூதுவரிடம் கடிதம் ஒன்றையும் சிறீதரன் எம்.பி. கையளித்துள்ளார்.

குறித்த நினைவுத் தூபி அமைப்புக்கு நன்றி தெரிவித்து கனேடியப் பிரதமர் மார்க் ஹானிக்கும், பிரம்டன் நகர மேஜர் பற்றிக் பிரவுணுக்கும் கடந்த 19ஆம் திகதி மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்களின் பிரதியே நேற்று கனேடியத் தூதுவரிடம் சிறீதரன் எம்.பியால் நேரில் கையளிக்கப்பட்டுள்ளது. (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X