2025 ஜூலை 09, புதன்கிழமை

’கப்பம்’ பெற்று வந்த ’வெல்லே சுரங்க’வின் உறவினர் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 19 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலகக் குழுவின் தலைவரான வெல்லே சுரங்கவின் உறவினர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – 15, மட்டக்குளி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 250 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரால் மட்டக்குளி பகுதியில் சிலரிடம் கப்பம் பெறப்படுகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபர், மட்டக்குளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .