Editorial / 2023 ஒக்டோபர் 15 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாகப்பட்டினம், நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சனிக்கிழமை (14) காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக்காட்சி மூலம் புதுடெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், நாகை-இலங்கை இடையே சனிக்கிழமை (14) தொடங்கப்பட்ட சொகுசு கப்பல் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை (15) ரத்துசெய்யப்பட்டு உள்ளது.
போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் திங்கட்கிழமை (16) மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் எதிர்பார்க்கப்படுகிறது.
31 minute ago
55 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
55 minute ago
57 minute ago
1 hours ago