Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 20 , மு.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெருங்கிய உறவினரிடையேயான பாலுறவு, பலவந்தப் பாலுறவு, சிறுவயதுக் கர்ப்பம், கருவில் கடுமையான குறைபாடு ஆகிய நிலைமைகளில் கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்க, அமைச்சரவையில் அங்கிகாரம் கோரப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.பி பிளஸ் தொடர்பான குழுவும் சாவித்திரி குணசேகர தலைமையிலான இன்னொரு குழுவும், கருக்கலைப்பை குற்றவியல் குற்றமாக்கும்படி செய்த பரிந்துரைகளுக்கு அமைய, நீதியமைச்சு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
இந்தக் குழு, 1995ஆம் ஆண்டில் ஒரு சட்டநகலைக் கொண்டுவந்தது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் கருக்கலைப்பைக் குற்றவியல் குற்றமற்றதாக்க எடுக்கப்பட்ட ஒரு முயற்சியை எடுத்துக் காட்டியது. ஆயினும், இந்தச் சட்டமூலம், எதிர்ப்புகள் காரணமாகக் கைவிடப்பட்டது.
தற்போது, மனநோய் மற்றும் உடல்நலக் குறைவு என்பவற்றுக்கு ஆளான பெண்களைத் தவிர ஏனையோர் கருக்கலைப்புச் செய்வது சட்ட விரோதமாகவே உள்ளது.
தாய் மரணங்களில் தொற்றுக்கு வழிசெய்த கருக்கலைப்பு, பிரதான காரணமாகவுள்ளது என, அமைச்சரவை அறிக்கை கூறுகிறது. 90 சதவீதமான கருக்கலைப்பு திருமணமான பெண்களிலும் 8.9 சதவீதமான பெண்களிலும் மேற்கொள்ளப்படுவதாக அவ்வறிக்கை கூறுகிறது.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago