Editorial / 2026 மே 12 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

காலி, தங்கேதர பகுதியில் உள்ள டிக்சன் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் உடனடியாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர், குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பான சந்தேகநபர்களை அடையாளம் காணவும் அவர்களைக் கைது செய்யவும் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
13 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
57 minute ago
1 hours ago