2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கழுகு கொலையுடன் தொடர்புடைய மேலும் அறுவர் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 30 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்மாத ஆரம்பத்தில் சில மனிதர்கள், ஈவிரக்கமில்லா முறையில் ஒரு கழுகின் தோலை உரித்து, பின்னர் அதன் கால்களை வெட்டிக் கொல்ல முயலும் கட்சியின் புகைப்படமொன்று, சமூக ஊடகங்கள் மற்றும் நவீன வலைத்தளங்களில் வெகு வேகமாகப் பரவியுள்ளது. 

இந்தக் கழுகுக் கொலையுடன் தொடர்புடைய மேலும் ஆறு சந்தேகநபர்களை, நேற்று செவ்வாய்க்கிழமை (29) காலியில் கைது செய்ததாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர். 

27 - 36 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாகவும் சந்தேகநபர்களை, காலி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தியபோது இன்று வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டதாகவும் ஹபராதுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .