Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 21 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த பொலிஸ் உத்தியோகத்தரது என சந்தேகிக்கப்படும் சடலம் பன்னல, வேரஹேர பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சடலம் இன்று (21) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
கடவத்தை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த திங்கட்கிழமை (16) முதல் காணாமல் போயிருந்தார்.
அவர் கொலை செய்யப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, கடந்த 18 ஆம் திகதி முதல் 3 பொலிஸ் குழுக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் வீரகெட்டிய பகுதியை சேர்ந்ா 37 வயதுடையவர் என கூறப்படுகின்றது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
19 minute ago
33 minute ago