Janu / 2025 நவம்பர் 26 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொஸ்வத்த, நாரவில பகுதியில் உள்ள ரத்மல் ஓயாவுக்கு கார் ஒன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளது.
துன்கன்னாவை,மானிங்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சந்திரா நளின் குமாரசிறி விக்கிரமசிங்க மற்றும் துன்கன்னாவை, பண்டாரநாயக்க புற பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய மிஹிரி மஹேஷிகா ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் காரில் சந்தானமகம வீதி வழியாக வந்து விகாரைக்கு அருகில் உள்ள குறுக்கு வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது வீதியில் உள்ள குழியொன்றில் விழுந்து அருகிலுள்ள ரத்மல் ஓயாவுக்கு கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கார் கவிழ்ந்த பிறகு, பிரதேசவாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரையும் வெளியே எடுத்தபோதும் அவர்கள் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

13 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
47 minute ago