Freelancer / 2025 ஜூன் 23 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி, அக்மீமன, வெவேகொடவத்த, திசாநாயக்க மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் இன்று (23) அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியால் வீடு ஒன்றை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகவும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் மிதிகம பிரதேசத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நிர்வாக பிரிவில் பணிபுரிந்துள்ளதோடு, சில நாட்களுக்கு முன்னதாக ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட ஊழியர் பின்னர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு அவரை அச்சுறுத்தி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர். R
8 minute ago
19 minute ago
27 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
27 minute ago
33 minute ago