Editorial / 2019 ஒக்டோபர் 07 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி முகத்திடலில் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள சஜித் பிரேமதாஸவின் கூட்டம், இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் கூட்டமாக அமையும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் அஜித் பி பெரேரா, இந்தக் கூட்டத்தில் சுமார் 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்பர் என்றும் தாம் நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பெப்ரல் அமைப்பானது, இலங்கை வரலாற்றிலேயே முதன் முறையாக அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் கொண்டுவந்து, மிகவும் பயனுள்ள ஒரு நிகழ்வொன்றை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பிரதான வேட்பாளர்கள் அதில் கலந்து கொண்டிருந்தபோதிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மட்டும் அதில் கலந்துகொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
இதேபோன்றதொரு சந்தர்ப்பத்தை நாம் மீண்டும் ஏற்படுத்த தயாராகவுள்ளோம் என்றும் அதாவது, சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ஷ, ஒரே மேடையில் இணைந்து, தங்களது கொள்கைப் பிரகடனங்கள் தொடர்பாக அனைத்து ஊடகங்கள் முன்னிலையிலும் விவாதமொன்றை நடத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இதற்காக நாம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் இதுபோன்ற மூன்று விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே தமது வேண்டுகோள் என்றும் இப்போதே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், கோட்டா, இதிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
32 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago
5 hours ago