2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் மரணம்

Freelancer   / 2025 ஜூன் 27 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீன்பிடிக்க முயன்ற 10 வயது சிறுவன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

யாழ். அச்சுவேலி - தோப்புப் பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பிரதீபன் தக்ஷன் (வயது 10) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனது பேரனுடன் குறித்த சிறுவன் தோட்டத்துக்குச் சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுவனின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .