2025 ஜூலை 09, புதன்கிழமை

'கிறிஸ்தவர்களை தேர்தல் குண்டுகளாக பயன்படுத்த கூடாது'

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளும் தரப்பினருக்கு தேர்தல் காலத்தில் மாத்திரமே கிறிஸ்தவ மக்கள் நினைவுக்கு வருவர் எனத் தெரிவிக்கும் காவிந்த ஜயவர்தன எம்.பி, கிறிஸ்தவர்​பளை தேர்தல் குண்டுகளாக மாத்திரம் பயன்டுத்த வேண்டாமெனவும் கோரினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

கிறிஸ்தவ மக்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் கையாளும் கொள்கை இரட்டிப்பு தன்மையுடையதாக உள்ளதெனவும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகளை அரசாங்கம் முறையாக முன்னெடுக்கவில்லை என்றும் சாடினார். 

குறிப்பாக தற்போதைய ஆளும் தரப்பு எதிர்தரப்பாக இருந்த காலத்தில் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு எதிராக மேற்கொள்வதாக கூறிய எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்கவில்லை என்றும் சாடினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .