Editorial / 2026 பெப்ரவரி 01 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை (01) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக, டிப்பர் வாகனத்தின் எரிபொருள் தாங்கி மற்றும் டயர் என்பன பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
மேலும், டிப்பர் வாகனத்தைச் செலுத்திய சாரதி தப்பி ஓடியுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
15 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
1 hours ago