Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 11 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியில், 17 ஆம் மைல்கல் புத்தி தசுன்கம பகுதியில், இன்று அதிகாலை (11) காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம்- மணல்குன்று பகுதியைச் சேர்ந்த, 39 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளாரென, கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புத்தளத்திலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த கெப் வாகனம் மீது, வீதியில் நின்ற காட்டு யானை தாக்குதல் நடத்தியதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் நடத்திய காட்டு யானையும் காயங்களுக்குள்ளாகி, சம்பவம் நடந்த இடத்திலேயே விழுந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
யானைக்கு சிகிச்சையளிப்பதற்காக, வடமேல் மாகாண வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துடன், கெப் வண்டி பாரியளவில் சேதமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில், கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago