Freelancer / 2025 ஜூன் 12 , மு.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொத்மலை - கெரண்டிஎல்ல பகுதியில் 23 பேர் உயிரிழந்த பஸ் விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பஸ் சாரதிக்கு ஏற்பட்ட சோர்வு, நித்திரை கலக்கம் மற்றும் ஓய்வின்மை ஆகிய காரணங்களினாலேயே விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த குறித்த விசாரணைக்குழுவின் பிரதானி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, குறித்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் உட்பட, 84 பேர் பயணித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதனை அடுத்து அருகிலுள்ள குழியொன்றில் விழுந்து பஸ் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனையடுத்தே விபத்து நேர்ந்துள்ளது.
எவ்வாறாயினும் விபத்தில் மரணித்த மேற்படி சாரதியின் மீது முழுப் பொறுப்பையும் சுமத்த முடியாது என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். (a)
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago