Freelancer / 2025 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் போதைப்பொருள் பாவனை அதிகமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இராஜகிரிய - ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, வெல்லம்பிட்டி - கொலன்னாவ, பொரளை - வனாத்த முல்ல, மொரட்டுவை - லுனாவ, முகத்துவராம் - மட்டக்குளி ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அடையாளம் காண விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் துறை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பல அரச நிறுவனங்கள் மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா ஆகியவற்றின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. R
5 minute ago
11 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
36 minute ago