2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு ஆரம்பம்

J.A. George   / 2019 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

“பாதுகாப்பு சூழ்நிலையில் இராணுவ தனிச்சிறப்பு நிலையை விருத்திசெய்தல்” எனும் தொனிப்பொருளின்  9ஆவது பாதுகாப்பு கருத்தரங்கு, கொழும்பு பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று (29) ஆரம்பமாகியது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

வரவேற்புரையை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆற்றியதுடன், ஆரம்ப உரையை பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட ஆற்றினார்.

அதன்பின்னர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆய்வாளர் நிதின் ஏ கோகலே பிரதான உரையை ஆற்றினார்.

இந்த பாதுகாப்பு கருத்தரங்கானது, பாதுகாப்பு பங்குதாரிகள், பாதுகாப்பு நிபுணர்கள், உலக மூலோபாய வள்ளுநர்கள், புத்திமான்கள் மற்றும் இராணுவ நிபுணர்களின் பங்களிப்புடன் “பாதுகாப்பு சூழ்நிலையில் இராணுவ தனிச்சிறப்பு நிலையை விருத்திசெய்தல்” எனும் தொனிப்பொருளின்  நடைபெறுகின்றது.

இந்த கருத்தரங்கில்  13 வெளிநாட்டு மற்றும் 14 உள்ளூர் பேச்சாளர்கள் உட்பட 800 வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளதுடன், இண்டு நாட்கள் நடைபெறும் இந்த பாதுகாப்பு கருத்தரங்கு நாளை (30) நிறைவடைகின்றது.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கானது “உலகலாவிய தடங்கல்களைக் கொண்டதொரு சகாப்தத்தில் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளிலும்,  2017ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு கருத்தரங்கானது வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல் எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .