Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2022 மே 14 , பி.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம போராட்ட தளத்தை பராமரிப்பதற்கான குழுவொன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.
இன்று (14) வெளியிட்ட விசேட வீடியோவிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை பிரதமர் தெரிவித்ததுடன், அதில் மேலும் தெரிவித்ததாவது,
கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் சுகாதார அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை, இராணுவம், பொலிஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவே நியமிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
கோட்டா கோ கம வளாகத்துக்கு தேவையான பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை வழங்குவது குறித்து ஆராயுமாறு பணித்துள்ளதாக குறிப்பிட்டார்.
போராட்டம் நடத்தும் இளைஞர்கள் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த பிரதமர், போராட்டத் தளங்கள் மீது அடக்குமுறை முயற்சிகள் நடைபெறாது என்றும் உறுதியளித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago