Editorial / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பு, கொழும்பில் இன்று (15) நடைபெற்றது.
ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்கும் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பான இதில், எதிர்ககட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் பங்கேற்றிருந்தார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இருவரும் பதில் வழங்கியிருந்தனர்.
அங்கு கருத்து வெளியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, “போரின்போது 13, 784 பேர் சரணடைந்தனர். அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி தொழில்வாய்ப்பை வழங்கினோம்” என்று கூறியுள்ளார்.
அத்துடன், “தடுப்புக்காவலில் வைக்கவில்லை. காணாமல் போனவர்கள் பட்டியலில் படையினரும் உள்ளனர். காணாமல் போனவர்கள் குறித்து விசாரணைகளை நடத்தியுள்ளோம். சரணடைந்த எல்லோரையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தியுள்ளோம்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, “நாட்டின் இறையாண்மைக்கு எதிரான எந்த உடன்படிக்கைகளையும் நான் செய்யமாட்டேன். ஒப்பந்தங்கள் ஏதும் வந்தால் அதுபற்றி பேசலாம். ஜனாதிபதியானால் அதுபற்றி ஆராய்ந்தே முடிவுகளை மேற்கொள்வேன்” என்றும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026