Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலத்மா ஜயவர்தன
'காணாமற்போன ஆட்களுக்கான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம், நாட்டின் தேசிய பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் ஆபத்துக்கு உள்ளாக்குவது மாத்திரமன்றி, போர் நாயகர்களையும் காட்டிக்கொடுப்பதாக அமையும்' என்று ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டீ சில்வா தெரிவித்தார்.
'இந்தச் சட்டமூலத்தில் திருத்தங்கள் கொண்டுபரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து, அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், அதில் எந்தவொரு திருத்தமும் கொண்டுவரப்படவில்லை. தெற்கு மற்றும் வடக்கு மக்களின் கோரிக்கைக்காக மாத்திரம் இது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. மேற்கத்தேய சக்திகளின் பூர்த்திக்காவே, இச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.' என்று அவர் கூறினார்.
'காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் தொடர்பான எண்ணக்கரு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரால் கடந்த வருடம் கொண்டுவரப்பட்டது. ஜனாதிபதி ஆணைக்குழுவைக் கலைந்து, இந்த அலுவலகத்தை அமைக்குமாறு அவர் பரிந்துரை செய்திருந்தார். இறுதியில் இது முழுமையாக வெளிநாட்டவர்களால் கையாளப்படும் அலுவலகமாக மாறும்' என்று அவர் குறிப்பிட்டார்.
'குறித்த அலுவலகத்திலுள்ள வெளிநாட்டவர்களுக்கு, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிலும் இராணுவ தலைமை காரியாலயம் உள்ளிட்ட சிறைச்சாலைகளுக்குள்ளும் விசாரணைக்காக செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். மேலும் மக்களால் வழங்கப்படும் எழுதிய மற்றும் வாய்மூலமான வாக்குமூலங்களை, அவர்களுக்கு ஏற்ற வகையில் எழுதக்கூடிய வாய்ப்பும் அவர்களுக்கு ஏற்படும்' என்று அவர் கூறினார்.
'நாட்டில் மக்கள் காணாமல் போனமைக்கு, பயங்கரவாதமே காரணமாகும். ஆனால், யுத்த காலத்தின் போது மக்கள் காணாமல் போனமைக்கு அரசாங்கமே காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது' என்று இதன்போது அவர் கூறினார்.
24 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
4 hours ago